142
சென்னையில் இன்று மின்சார புகையிரதத்தில் தொங்கியபடி பயணம் செய்தபோது மின்கம்பத்தில் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த புகையிரதத்தில் இடம் கிடைக்காமையினால் சிலர் தொங்கிக் கொண்டு பயணம் செய்துள்ளனர்.
பரங்கிமலை அருகே வந்தபோது, ஒரு பெட்டியில் தொங்கிக்கொண்டு வந்த இளைஞர்களில் ஒருவரது பொதி மின்கம்பத்தில் சிக்கியதால் அவர் உள்பட சிலர் தூக்கி வீசப்பட்டதாகவும் இதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Spread the love