கிளிநொச்சியில் கடந்த திங்கள் முதல் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் மற்றும் பரவிபாஞ்சான் நிலம் மீட்பு போராட்டம் அந்த மக்களோடு இருந்துவிடாது வெகுஜனப் போராட்டமாக மாற வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
பரவிபாஞ்சான் மற்றும் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த மக்கள் கடந்த ஏழு வருடங்களாக தங்களின் சொந்த நிலத்திற்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவினர்களுக்காகவும் போராடி வருகின்றார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இவர்களின் போராட்டங்களின் போது அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் என பலரும் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்கள் காலக்கெடுவும் கொடுத்திருந்தார்கள் எதுவும் சாத்தியப்படவி;லலை. இந்த நிலையில்தான் மக்கள் தாங்களாகவே எழுச்சிக்கொண்டு போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றார்கள் எனவே இந்த மக்களின் போராட்டத்திற்கு எனது தார்மீக ஆதரவு எப்பொழுதும் கிடைக்கும் எனத் தெரிவித்த அவர் இவர்களுக்காக இந்தச சமூகத்தில் இருக்கின்ற அனைத்து அமைப்புக்கள் பொது மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஆதரவை வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.