180
வாக்களித்த மக்கள் தன்னைச் சந்தித்துக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்வதற்குத் தான் இவ்வாறான கொலை மிரட்டல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். அதனால் தான் அவருடைய சொந்தக் கட்சியிலுள்ள முதலமைச்சர் விக்கினேஸ்வரனும், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் கூட சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் என்பது நாடகம் என தெரிவித்து உள்ளனர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ். கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
சுமந்திரனோ அல்லது வேறு எவராயினும் கொள்கையளவில் துரோகமளித்தாலும் கொலை செய்ய வேண்டிய தேவை எமக்கில்லை.
வாக்களித்த மக்கள் தன்னைச் சந்தித்துக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்வதற்குத் தான் இவ்வாறான கொலை மிரட்டல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். அதனால் தான் அவருடைய சொந்தக் கட்சியிலுள்ள முதலமைச்சர் விக்கினேஸ்வரனும், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் கூட சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமையை நாடகம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
எமக்கு உயிராபத்து ஏற்பாட்டால் சம்பந்தன் சுமந்திரனே பொறுப்பு.
சம்பந்தன் புதன்கிழமை பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் உரையாகவே அமைந்துள்ளது.
எங்களது உயிர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறத் தேவையில்லை. ஆனால், சம்பந்தனும், சுமந்திரனும், அவர்களுடன் இருக்கின்ற குழுவும் தான் பொறுப்புக் கூறியாக வேண்டும் என்பதை நாங்கள் பகிரங்கமான எமது கோரிக்கையாக முன்வைக்க விரும்புகிறோம்
சம்பந்தன் தமக்குத் துரோகமிழைப்பதாகத் தெரிவித்துப் பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியான எங்கள் கட்சியின் பெயரையோ அல்லது கட்சியின் தலைவரான என்னையோ அல்லது கட்சியின் செயலாளரையோ பெயர் குறிப்பிடவில்லை.
ஆனால் தோற்றுப் போன தரப்பு கடந்த தேர்தலில் தமிழ்மக்களிடம் 15 ஆயிரம் வாக்குகள் பெற்ற தரப்புத் தங்களுக்கெதிராக செயற்படுவதாகக் குற்றச்சாட்டியுள்ளார்.
இதற்கும் மேலதிகமாக அவர் நாங்கள் தீவிரவாதிகள் என்றதொரு கருத்தையும் முன்வைத்திருக்கிறார்.
சிங்களத் தேசிய வாதம் சொல்லிக் கொண்டிருக்கும் நிலைப்பாட்டிற்குச் சம்பந்தனும் இணங்கியிருப்பதால் தான் எங்களை அவர்கள் தீவிரவாதிகளாகப் பார்க்கிறார்கள்.
எங்கள் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்துவதை விட்டுவிட்டுப் பகிரங்கமாகச் சொல்கின்ற அரசியல் கருத்துக்களுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் உரிய பதிலைச் சொல்லுங்கள்.
முதுகெழும்பு இருந்தால் சம்பந்தன் , சுமந்திரன் பகிரங்க விவாதத்திற்கு வரட்டும்.
சுமந்திரனை எங்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு எத்தனையோ தடவைகள் நாங்கள் கோரினாலும் அவர் இதிலிருந்து நழுவிப் போகிறார்.
இன்று மக்கள் மத்தியில் செல்வதற்குத் தனக்கு ஆபத்து எனச் சுமந்திரன் பொய் கூறுகின்றார். வாக்களித்த மக்கள் மத்தியில் முகம் கொடுக்காமல் தப்புவதற்கான யுக்தியாகவே அவர் தனக்குப் பாதுகாப்பில்லை எனக் குறிப்பிடுகிறார்.
உண்மையிலேயே உங்களுக்கு முதுகெலும்பு உள்ளதாயின் சம்பந்தன் எங்களுடன் ஒரு விவாதத்திற்கு வரட்டும் பார்க்கலாம் என சவால் விட்டார்.
Spread the love
1 comment
முதுகெலும்பு இருந்தால் பகிரங்க விவாததத்துக்கு வரட்டும், மான ரோசம் இல்லாத கூலிக் கூட்டத்திடம் முதுகெலும்பை எதிர்பார்க்கலாமா , கொலைச் சதியும் இல்லை ஒரு மசிரும் இல்லை, காக்கை வன்னியர் கூட்டத்தை கட்டப்பொம்மனாக காட்டுவதர்க்கு சிங்கமும் நரியும் சேர்ந்து போட்ட நாடகம்தான் இது , தன்மானத் தமிழன் எவனும் இந்த செய்தியை பெரிது படுத்தவில்லை பெரிது படுத்த போவதும் இல்லை , இனப்படு கொலைகாரனை சர்வதேச விசாரனைக்கு கொண்டுவருவேன் என்ரு புலம் பெயர் தேசத்திலிருந்து அல்ஜசீராவுக்கு நீட்டி முழங்கிய ஒரு மேசையும் இரண்டு கதிரையும் போட்ட அமைப்பை சேர்ந்தவர்தான் ஊ ஊ ஊ ஹா ஹா என்ரு கிலுக்கி போட்டு சோர்ந்து போய் படுத்துவிட்டார் ஜயோ பாவம், ராஜன்.