ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து அரசாங்கம் இராணுவத்தினரை கைது செய்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பாரியளவிலான குற்றச் செயல்கள் தொடர்பில் ஏதேனும் ஓர் வழியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காண்பிக்கும் நோக்கில் சில இராணுவ புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இதன் ஒர் கட்டமாகவே ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் தொடர்பில் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில் தவறில்லை என்ற போதிலும் சரியான சட்ட விதிகள் பின்பற்றப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கம் சட்டவிரோத கைதுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
1 comment
கெஹலிய மாத்தையா இது ஒரு நாடகம் ஜ நா மனித உரிமை கூட்டத்தொடர் முடிந்தபின் அவர்கட்க்கு விடுதலை, இப்பொழுதும் அவர்கட்க்கு ஜந்து நட்சத்திர விடுதி வாழ்க்கைதான் , குடி கூத்தி எல்லா ஆடம்பரமும் உண்டு , தமிழரின் காதில் காக்கைவன்னியர் கூட்டம் பூ வைப்பது போல் கொலைகார கூட்டமும் ஜ நாவின் காதில் பூ வைக்கின்ரது அது தான் மாத்தையா நிஜம் , ராஜன்.