சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு கோரியுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டியது அவசியமானது என குழு கோரியுள்ளது.
காவல்துறையினரும் சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினரும் இந்த விசாரணைகளை உரிய முறையில் முன்னெடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஊடகவியலாளர் கீத் நொயார் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் ஐந்து இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த அதிகாரிகளுக்கும் லசந்த கொலைக்கும் தொடர்பு உண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது.
2009ம் ஆண்டு ஜனவரி மாதம் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது