வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இலட்சக்கணக்கான முஸ்லிம் மக்களை மீள்குடியமர்த்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆதரவளிக்க வேண்டும் என மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதியமைச்சருமான அமீர் அலி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற காணிச் சட்ட திருத்தம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த மக்களை குடியேற்றுவதற்காக வில்பத்து அபகரிக்கப்படவில்லை எனவும் எவரும் அங்கு மீள்குடியேற்றப்பட இல்லை எனவும் தெரிவித்த அவர் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியமர்த்த வடபுலத்திலுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடபுலத்தில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க நல்லாட்சி அரசாங்கம் நேர்மையான சிந்தனையுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.