Home இந்தியா ஆதியோகி! தொன்மையான ஒரு ஏகாதிபத்தியம் – இனக்கொலைகளின் வழி! பேராசிரியர் பிரேம் – டெல்லிப் பல்கலைக்கழகம்

ஆதியோகி! தொன்மையான ஒரு ஏகாதிபத்தியம் – இனக்கொலைகளின் வழி! பேராசிரியர் பிரேம் – டெல்லிப் பல்கலைக்கழகம்

by admin

‘உலகிலேயே மிகப்பெரிய திருமுகமாக, 112 அடி உயர ஆதியோகி சிலை திறப்பு விழா’ என விளம்பரம் செய்து வருகிறது ஈஷா நிறுவனம். இந்த பிரமாண்ட சிலையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். ஈஷா மீதான விதிமுறை மீறல் முறைப்பாடுகள் இந்திய அளவில்  பேசப்பட்டு வருகிறது.மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஈஷா யோகா மையம். மேற்குத்தொடர்ச்சி மலை, அதையொட்டிய வனம், நீர் ஆதாரங்கள் என இயற்கை வளங்களைக் கொண்ட இந்தப் பகுதி மலைதள பாதுகாப்பு குழுமத்தின் அதிகார வரம்பில் உள்ள பகுதியாகும். இதன் காரணமாகவே இங்கு கட்டுமானங்களை மேற்கொள்ள ஏகப்பட்ட விதிமுறைகள் உண்டு. விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது, பிரமாண்ட கட்டடங்களைக் கட்டுவது எல்லாம் அனுமதிக்க முடியாத என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

தென்னிந்திய – வடந்திய அரசியலின் முரண்பாட்டு  அம்சங்கள் கொண்டதாகவும் இயற்கையை பாதிக்கும் செயலாகவும் ஆதியோகி சிலை அமைப்பை விமர்சர்கள் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லிப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் பிரேம் “இனங்களின் தன்னுரிமையையும், தொல்குடிகளின் நில உரிமையும் அழித்து ஒற்றைப் பேரரசை உருவாக்கும் வளம் சார்ந்த ஏகாதிபத்தியம் பற்றிய கனவு மிகத்தொன்மையான காலத்தில் உருவான ஒன்று” என்று தன்னுடைய பார்வையை முன்வைத்துள்ளார்.

அவரது கருத்து பின்வருமாறு.

ராமாயணம் அதன் எடுத்துக்காட்டு கோசல அரசை மையமாகக் கொண்ட ஆரிய சத்திரிய-பிராமண ஒற்றைப் பேரரசுதான் அதன் திட்டம். பெரும் போர் இயந்திரமே அதன் மையம். தாடகையின் நிலத்தை தன்வயப்படுத்த தாய் வழிச் தாய் அரசுச் சமூகத்தை அழித்தலில் தொடங்கும் இன அழிப்புப் போர் லங்கா தீபத்தின் சுதந்திர அரசை அழித்து தனக்குக் கட்டுப்பட்ட அடிமை அரசை உருவாக்குவது வரை நீள்கிறது. வாலி அடங்க மறுக்கும் இன அரசு, சுக்ரீவன் தன் இனத்தின் அரசைக் கைப்பற்ற அடிபணியும் இன அரசு. ராவணன்-விபீஷணன் என்ற இரட்டையும் எதிர்த்து அழிதல் அடங்கி துணை நிலமாக, காலனியாக மாறுதல் என்ற செயல்பாடுகளே.காலனியாக்கத்தின் இன்றைய உத்தியும் இதுவே. ஒரே இனத்திற்குள் முரண்களை மோதல்களை உருவாக்கிப் பின்அதில்ஒன்றைக் காப்பதாக உள் நுழையும் நவீன ஏகாதிபத்திய போர் இயந்திரம். பிறகு உலகு முழுமைக்குமான ஆதிக்கம். சுக்ரீவன் படை துணை ராணுவமாக மாறுவதும், விபீஷண தேசம் ராம ஏகாதிபத்தியத்தின் அடிமை நிலமாவதும் இன்றைய ஏகாதிபத்திய உலகமயமான வல்லாதிக்க உத்தியின் தொல் வடிவங்களே. ராமன்-சீதை- லக்ஷ்மணன் தன் நாடு விட்டு வெளியேறுதல் பிற இன நிலங்களை ஊடுறுவும் நெடும் பயணம். சீதை நிலத்தின் வளம்-செல்வம்-நிலம் என்ற தொல் குறியீடு. அதனை ராவணன் சிறை வைத்தல் என்பது மற்றமைகள்-வேறு அரசுகள் தம் நிலத்தை வளத்தை செல்வத்தை வசப்படுத்தும் வாய்ப்பு உள்ளதால் அவை அனைத்தையும் தம் கட்டுப்பாட்டில் வைப்பது, அடிமை கொள்வது இதுதான் நமது வளத்திற்கும், நலத்திற்கும் உகந்தது என்ற ஏகாதிபத்திய உளவியலின் அடிப்படையையாக புனையப்படுகிறது.

சீதை மீண்டும் காட்டில் வாழ வெளியேற்றப்படுவது, காட்டில் குழந்தைகள் வளர்வது. ராமன் நாட்டில்-அரசில் இருந்து ஆண் அரசை காப்பது என்பவை நாடு-காடு இரண்டிலும் தன் இனத்தின் ஆதிக்கம் மட்டும் நிருவப்படுவதன் உத்தி முறைகள்.

மனித குலத்தின் வரலாற்றை ராம கதையாக மாற்றும் உத்தியில் ராமாயணம் தன் ஒற்றை வம்சம், ஒற்றை இன. ஒற்றை அரசு பற்றிய பாடலாக மாறி மற்றவற்றை நீக்கம் செய்கிறது. இன்பம்-துன்பம், இழப்பு-மீட்சி அனைத்தும் ஒன்றை இனம்-ஒற்றை தேசம் சார்ந்தவைகளாக மாறும் போது மற்றவற்றின் அழிவு கொண்டாட்டத்திற்குரியதாக உருவமைக்கப்படுகிறது.

இன்றைய பேராதிக்க-இனமைய அரசியலின் உள்ளமைப்பாக உள்ள உளவியலின் ஒரு வரைபடம் ஒரு காவியமாக மட்டுமின்றி புனிதக் கதையாடலாகவும் தொடர்கிறது. ராமர்களின் வழி, நெடுவழி, பெரும் போர்களின் வழி, ஏகாதிபத்திய, இனக்கொலைகளின் வழி… என்றும் பிரேம் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More