தற்கொலையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மன அழுத்தம், பொருளாதாரம், வேலையின்மை ஆகிய காரணங்களால் தற்கொலை முடிவை தேடிக் கொள்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியா போல குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதென தெரிவித்துள்ளதுடன் 2௦15-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 5 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 3 கோடி பேர் மனநலக் கோளாறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூட்டிக்காட்டியுள்ளது.
மேலும் உலகம் முழுவதும் சுமார் 32 கோடிக்கும் அதிகமானோர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அரைவாசிக்கும் மேற்பட்டோர்; தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வசித்து வருகின்றனர் எனவும் குறிப்பிடட்டுள்ளது.
மேலும் 15 முதல் 29 வயதுடைய இளம் பருவத்தினரே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனவும் மன அழுத்த நோயால் ஆண்களை விட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.