அனைத்து நாடுகளுடனும் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதனூடாக பொருளாதார முன்னேற்றத்தை துரிதமாக்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க காங்கிரஸின் நீதி செயற்பாட்டு மேற்பார்வைக் குழுவின் தலைவர் Bob Goodlatte உள்ளிட்ட அமெரிக்க உயர் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு உறவுகளை பலப்படுத்துதல் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. இலங்கையின் புதிய அபிவிருத்தி திட்டங்களுக்காக அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்
நாட்டில் மீண்டுமொரு போர் ஏற்படுவதனைத் தவிர்த்து, நாட்டில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்திய ஜனாதிபதி;, நாட்டில் நல்லிணக்கத்தை பலப்படுத்துதல், மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்தி அனைத்து மக்களும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோளாகுமெனவும் தெரிவித்தார்.