Home இந்தியா இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் நிலநடுக்கம்

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் நிலநடுக்கம்

by admin

Graphic shows large earthquake logo over broken earth and Richter scale reading

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இன்று மாலை 5.32 மணியளவில் மணிப்பூர் மாநிலத்தின் சுரச்சந்த்ரபூர் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. சுமார் 20 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு இருந்ததாக தேசிய மைய நிலநடுக்கவியல் மற்றும் புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் உண்டான சேதங்கள் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. இன்று அதிகாலை சிக்கிம் மாநிலத்தில் 3.5 என்ற ரிக்டரளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More