ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்துவது தொடர்பில் நேர அட்டவணையொன்று சமர்ப்பிக்கப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியிருந்தது.
எனினும் தீர்மானத்தில் செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளனவா? என்பது குறித்து ஆராயும் பொது கால அட்டவணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 25 முக்கிய விடயங்கள் தொடர்பில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.