158
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் மாதம் ரஸ்யாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்னின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு இவ்வாறு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் மார்ச் மாத நடுப்பகுதி அளவில் ஜனாதிபதி சிறிசேன இவ்வாறு ரஸ்யாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் ரஸ்ய விஜயத்தின் போது பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாக ரஸ்யாவிற்கான இலங்கை தூதுவர் டொக்டர் சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார். சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த இந்த விஜயத்தின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது.
Spread the love