பக்கச்சார்பற்ற சுயாதீனமும் முன்மாதிரியுமான நீதி முறைமையை நாட்டில் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
382 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பொலன்னறுவை நீதிமன்றக் கட்டிடத் தொகுதிக்கு அடிக்கல் நடும் வைபவத்தில் இன்று (25) கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை மிகவும் வினைத்திறனாக மேற்கொள்ளும் நோக்கில் நீண்டகாலமாக பொலன்னறுவை நீதிமன்ற அலுவலகங்களில் இருந்து வந்த இடப் பிரச்சினைக்கு தீர்வாக இந்த புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளாh.