அரசாங்கத்திலிருந்து வெளியேறினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளத் தயார் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டுமெனில் பிரதான நிபந்தனை ஒன்றை பூர்த்திச் செய்ய வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
காலியில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்பட, ஒன்றிணைந்த எதிர்கட்சி தயாராக உள்ளதாகவும் எனினும், இந்த அரசாங்கத்தில் உள்ள அனைத்து சுதந்திர கட்சியின் உறுப்பினர்களும் வெளியே வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.