ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 34ம் அமர்வுகள் இன்றைய தினம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 24ம் திகதி வரையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அமர்வில் இலங்கை சார்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன பங்கேற்க உள்ள நிலையில் அமைச்சர் மங்கள சமரவீர மாநாட்டில் உரையாற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து மங்கள சமரவீர விளக்கம் அளிக்க உள்ளார். அதேநேரம் 2015ம் ஆண்டு ஜெனீவா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் கால அவகாசம் கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு கால அவகாசத்தை கோரும் என தெரிவிக்கப்படுகிறது.