இந்தியா

ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க உள்ளனர்:-

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள்; ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நாளை சந்திக்க உள்ளனர். மைத்ரேயன் தலைமையில் சுமார் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஜனாதிபதியிடம் மனு அளிக்க உள்ளதாக ஓ.பி.எஸ் ஆதரவாளரும், நாடாளுமன்ற உறுப்pனருமான பி.ஆர்.சுந்தரம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழத்தில் அதிமுக கட்சியினரின் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்ற நிலையிலும் கடும் எதிர்ப்பு இருப்பதாக கருதப்பட்டு வந்த நிலையிலும் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply