158
நாடு பிழையான பாதையில் நகர்கின்றது என தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். நாட்டை சரியான பாதையில் நகர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு மெய்யான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் எனவும், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்காலம் பற்றி தீர்மானிக்கும் வகையிலான மாநாடு ஒன்று நாளைய தினம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
Spread the love