Home இந்தியாஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய சகோதரர்கள் இருவர் குஜராத்தில் கைது:-

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய சகோதரர்கள் இருவர் குஜராத்தில் கைது:-

by admin

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய சகோதரர்கள் இருவரை குஜராத் மாநில தீவிர வாத தடுப்பு பொலீஸார் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் தாக்குதலை நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அந்த மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு பொலீஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சமூகவலைத் தளங்களை கண்காணித்த காவல்துறையினர் குறித்த சகோதரர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதி களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதனை கண்டுபிடித்தனர்.

ஆவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது இவர்கள் குஜராத்தில் தொடர் குண்டு வெடிப்பு மற்றும் சோட்டிலோ கோயில் மீது தாக்குதல் நடத்திவிட்டு சிரியாவுக்குச் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தனர் என தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More