கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று எட்டாவது நாளாக தொடர்கிறது.
20-02-2017 திங்கள் காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று இன்று திங்கள் கிழமை எட்டாவது நாளாக தொடர்கிறது
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம் எனவும் இலங்கை அரசுக்கு பொறுப்புக் கூறல் விடயத்தில் ஜநா கால அவகாசம் வழங்கக் கூடாது என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உ றவினர்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
தங்களுக்கு உறுதியான தீர்வு கிடைக்கும் வரைக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடரப் போவதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்ட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்
இன்று மாலை பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமச் சந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சம்மந்தன் அவர்கள் விடுத்த அறிக்கைக்கு தங்களது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள் தங்களின் உணர்வுகளுக்கு மாறாக குறித்த அறிக்கை சம காலத்தில் வெளியிடப்பட்டமை வருத்தமளிக்கிறது எனவும் சுட்டிக்காட்டினார்கள்.