162
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது. சீன வர்த்தக அமைச்சர் zhongshan இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் சீனாவில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பொருளாதாரம் சற்றே மெதுவாக வளர்ச்சியடைந்து வருவதாகவும் இதனை துரிதப்படுத்துவதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திர வர்த்தக வலயங்களை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love