மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட குறித்த பணிப்புறக்கணிப்பு, நண்பகல் 12 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியினால் வழங்கப்படும் பட்டத்தை இலங்கை மருத்துவ சபை அங்கீகரிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கடந்த 20ஆம் திகதி ஊவா மாகாணத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு மாகாண ரீதியாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.