250
ஆபிரிக்காவிலிருந்து லிபியாவின் வழியாக இத்தாலிக்கு ஆபத்தான பயணம் மேற்கொள்ளும், எதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் கடத்தல்காரர்கள் மற்றும் அதிகாரிகளின் வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என ஐ.நா. எச்சரித்துள்ளது.
கடந்த வருடம், எந்த துணையுமின்றி சுமார் 26 ஆயிரம் குழந்தைகள் மத்திய தரைக் கடலை கடந்துள்ளனர் எனவும் இது, 2015 ஆம் ஆண்டை காட்டிலும் இருமடங்காகும் என யுனிசெஃப் தெரிவித்துள்ளது. எல்லைகளில், சட்டவிரோத கைது, பாலியல் வன்முறை, இரக்கமற்ற துன்புறுத்தல் ஆகியவற்றிற்கு குழந்தைகள் எவ்வாறு ஆளாகின்றனர் எனவும் அந்நிறுவனம் விவரித்துள்ளது.
Spread the love