Home இலங்கை வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளை பதிவுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளை பதிவுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு

by admin

வட மகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் முழுமையான விபரங்களை அறிந்துகொள்வதற்காக அவர்களை நாளை புதன் கிழமை முதல் பதிவுகளை மேற்கொள்ளுமாறு  அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அழைப்பினை வடக்கு மாகாண சபையின உறுப்பினர்  கனகரட்னம் விந்தன் விடுத்துள்ளார். யாழ் மாவட்ட ச் செயலகம் முன்பாக  காலவறையறையற்ற தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டும் வரும் வேலையற்ற பட்டதாரிகளை இன்று   செவ்வாய் கிழமை  வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சுகிர்தன்,கமலேஸ்வரன்,  சிவாஜிலிங்கம்,   விந்தன் கஜதீபன்,லிங்கநாதன்     ஆகியோர்   நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளதன் பின்னரே இவ்வழைப்பை விடுத்துள்ளார்.

இதேவேளை கால வறையற்ற கவனயீர்ப்பு  போராட்டத்திர் ஈடுப்பட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகள் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கின்ற ஆளுநரும் .மாகாண சபையின் பிரதிநிதியாக இருக்கின்ற முதலமைச்சரும்  பட்டதாரிகளை வேலைவாய்ப்பில் சேர்த்துக்கொள்வது தொடர்பில் எழுத்துமூலமான  பதிலை வழங்கினால்  போராட்டத்தை கைவிடுவது பற்றி பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

அத்தோடு பட்டதாரிகளை வேலைவாய்ப்புக்கு சேர்த்துக்கொள்ளும் போது போட்டிப் பரீட்சை நடத்தாது நேர்முகத்தேர்வின் தகமையை பரிசீலித்து பட்டம் பெற்ற ஆண்டின் அடிப்படையில் நியமனம் வழங்குவது தொடர்பில் உறுதிமொழி வழிங்க வேண்டும், மேலும் எதிர்காலத்தில் பல்கலைகழகங்களில் இருந்து வெளியேறுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கு அமைவாக துறைசால் பிரிவுகளில் அவர்களை  அரச சேவையில் உள்ளீர்ப்பதற்கான சட்டரீதியான கொள்ளை திட்டமிடல்களை கொண்டு வர வேண்டும் என மூன்று பிரதான கோரிக்கைகளை முன் வைத்து வேலையற்ற பட்டதாரிகள் காலவரையறையற்ற போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்கள்

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More