215
தான் நலமாக இருப்பதாகவும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனவும் வடமாகாணமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளின் பின்னர் தற்போது அவர் வீடு திரும்பியுள்ளார்.
இந்தநிலையில் சில பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவே வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டி ஏற்பட்டது எனவும்; தற்போது தான் நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது உடல்நலம் குறித்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியிருந்த தகவல்கள் தவறானவை எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் இவ்வாறான தகவல்களைப் பரப்ப வேண்டாமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Spread the love