184
படையினரை பயன்படுத்தி ஆட்சியை பிடிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பினர் முயற்சிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராக செயற்படுவதாக போலியான தகவல்களை மகிந்த அணியினர் பரப்பு வருவதாகவும் இதன் ஊடாக இராணுவத்தை அரசாங்கத்துக்கு எதிராக திருப்பும் சதித் திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து அரசாங்கம் அவதானமாக செயற்பட்டு வருவதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
Spread the love