கல்கிஸ்ஸ நீதிமன்றில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் மீட்கப்பட்ட ஆயுதங்கள், பாதாள குழு உறுப்பினர் ஒருவரை கொலை செய்வதற்காக கொண்டுவரப்பட்டவை என்று சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதாள குழு ஒன்றின் தலைவரான தெமுனி, ஹெரால்ட் ரோஹன எனப்படும் கொனாகோவிலே ரோஹா என்பவரை கொலை செய்வதற்காக இந்த ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்அடிப்படையில் விசேட காவல்துறை குழு ஒன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஒரு பிஸ்டல் மற்றும் பத்து துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்கிஸ்ஸ நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு
Mar 1, 2017 @ 14:36
கல்கிஸ்ஸ நிதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைத்துப்பாக்கி ஒன்று, துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்டன இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
ஆயுதங்கள் மீட்கப்பட்டதனைத் தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகள் தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.