கேப்பாபுலவு , பிலகுடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி முதல் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அந்நிலையில் இன்றைய தினம் பிலகுடியிருப்பு காணிகளை விடுவிக்கப்பட்டது. முன்னதாக பிலகுடியிருப்பில் உள்ள 54 குடும்பங்களில் 37 குடும்பங்களின் காணிகள் முற்றாக விடுவிக்கப்பட்டது. 7 குடும்பங்களின் காணிகள் பகுதிகளவில் விடுவிக்கப்பட்டன ஏனைய 10 குடும்பங்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை.
பிலகுடியிருப்பு மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கபாட்டால் மாத்திரமே போராட்டத்தை கைவிடுவோம் என கூறி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாலை ஏனைய மக்களின் காணிகளையும் விடுவிப்பதாக விமான படையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து இன்று மாலை 5.45 மனியலவுடன் பிலகுடியிருப்பு மக்கள் தமது போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.
இதேவேளை கேப்பாபுலவு கிராம சேவையாளர் பிரிவில் 500 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் பிலகுடியிருப்பு பகுதியில் உள்ள 40 ஏக்கர் காணி மாத்திரமே விடுவிக்கப்பட்டு உள்ளது. அதில் 24 ஏக்கர் காணி முன்னரே விமான படையினர் விடுவிக்க இணங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.