தென் கொரியாவும் அமெரிக்காவும் கூட்டு இராணுவப் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளன. வருடாந்த இராணுவப் பயிற்சிகள் இம்முறை பாரிய அளவில் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் இந்த பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்ற இந்தப் போர் பயிற்சிகளுக்கு Foal Eagle எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 12ம் திகதி வடகொரியா ஏவுகணையொன்றை பரிசோதனை செய்துள்ள நிலையில், தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து பயிற்சிகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் நடைபெற்ற இராணுவ பயிற்சிகளின் போது 17,000 அமெரிக்கப் படையினரும், 300,000 தென் கொரிய படையினரும் பங்கேற்றிருந்தனர். தென் கொரியாவிற்கு பாதுகாப்பினை வழங்க ஆயத்தமாக இருப்பதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் Jim Mattis தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment