ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் முரண்பாட்டு நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் இணங்குகின்றார்கள் எனக் கூற முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சவரணபவன் தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் எனினும், இந்த தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளதாகவும் தீர்மானத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்த அரசாங்கத்தின் முனைப்புக்கள் எந்தளவில் காணப்படுகின்றது என்பதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆய்வு செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளார்.