மன்னார் பொது வைத்தியசாலையில் காவல்துறை பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர் ஒருவர் தப்பியோடியுள்ளார். திருட்டுச்சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோதே வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இச்சம்பவத்தினால் விசேட பாதுகாப்பில் ஈடுபட்ட மூன்று காவல்துறையினர் தற்காலிகமாக பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் மன்னார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது திடீர் சுகயீனம் அடைந்த நிலையில் நேற்று முன்தினம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் காவல்துறை பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.