களுத்துறையில் சிறைச்சாலை பேருந்து மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 2 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனால் அமைச்சரவையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின்போது, இறந்த அதிகாரிககளின் தரத்தை உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் களுத்துறையில், சிறைச்சலை பேரூந்து மீது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தின் போது சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் உட்பட 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment