சிரியாவின் அலெப்போ நகரை கைப்பற்றும் முகமாக கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட மோதல்களின் போது இரு தரப்பிலும் போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குறித்த புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய ஆதரவுடனான சிரிய அரச படையினர், குளோரின் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கானவர்களின் உயிர்களை பறித்ததாகவும் அதேவேளை, கிளர்ச்சியாளர்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கண்மூடித்தனமான குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
தமது கோட்டையை நிறுவி கட்டுப்பாட்டில் வைத்திருந்த அலெப்போவில் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கடந்த டிசம்பர் மீட்கப்பட்தனைத் தொடர்ந்து தொடர்ந்து அலெப்போ மோதல் முடிவுக்கு வந்துத.
இதன்போது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்படி நூற்றுக்கணக்கான சாட்சி விசாரணைகள் மற்றும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் என்பவற்றை ஆய்வு செய்து இவ்வாறு இரு தரப்பும் போர்க்குற்றங்களை இழைத்துள்ளதாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.