இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், இந்தியா – அமெரிக்கா உறவு குறித்தும் கலந்தாலோசிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க பிரநிதிகள் சபையின் சபாநாயகர், போல் ரயான்னுடனும் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தியுள்ளார் . இந்திய வெளியுறவுச் செயலாளருடான சந்திப்பு இந்தியா – அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு உடன்பாடுகள் குறித்தும், பொருளாதாரத்தை அதிகரிப்பது குறித்தும், ஆலோசிக்க நல்ல வாய்ப்பாக அமைந்திருந்தது என இந்த சந்திப்பு குறித்து போல் ரயான் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை பகிர்ந்ததன் மூலம் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையான உறவு நன்கு வேரூன்றி உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ். ஜெய்சங்கர் கடந்த செவ்வாய்க்கிழமை ட்ரம்ப் நிர்வாகத்தின் சிரேஸ்ட அதிகரிகளுடன் ஆலோசனை நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.