விளையாட்டு

ஆயுட்கால தடையை நீக்கக் கோரி ஸ்ரீசாந்த் வழக்கு


தன் மீதான ஆயுட்கால தடையை நீக்ககோரியும், தடையில்லா சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரியும் இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கேரள உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்து உள்ளார். 2013ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியின் போது ஸ்ரீசாந்த் கிரிக்கெட்ட சூதாட்டத்தில் ஈடுபட்டமை தெரிய வந்ததனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவருக்கு ஆயுள்கால தடை விதித்தது.

எனினும்  2015-ம் ஆண்டு சூதாட்ட குற்றச்சாட்டில் இருந்து டெல்லி  நீதமன்றம் விடுவித்திருந்த போதும்  ஆயுட்கால தடையை நீக்கவில்லை.

ஸ்கொட்லாந்தில் ‘லீக்’ போட்டியில் விளையாட தனக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு ஸ்ரீசாந்த் கேட்ட போதும் கிரிக்கெட் வாரியம் வழங்க மறுத்துவிட்டது. இந்த நிலையில் தன் மீதான ஆயுட்கால தடையை நீக்ககோரியும், தடையில்லா சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரியும் ஸ்ரீசாந்த் கேரள உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply