48 மணித்தியாலங்களில் 15000 பயங்கரவாதிகள் ஆயுதம் ஏந்தக் செய்ய முடியும் என முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 11000 முன்னாள் போராளிகள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும், மேலும் 4000 தமிழர்கள் பற்றிய தகவல்கள் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் பயங்கரவாதிகள் மீளவும் தலைதூக்கக் கூடிய வகையிலான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
உலகின் எந்தவொரு நாட்டிலும் புலனாய்வுப் பிரிவுகள் மிகவும் முக்கியமானவை எனவும், தற்போதைய அரசாங்கம் புலனாய்வுப் பிரிவினை மலினப்படுத்தி பலவீனப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் தமிழர்களை திருப்திபடுத்தும் நோக்கில் அரசாங்கம் இராணுவப் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்களை கைது செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.