Home உலகம்இத்தாலியில் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த மூவர் பனிச் சரிவில் சிக்கி உயிரிழப்பு

இத்தாலியில் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த மூவர் பனிச் சரிவில் சிக்கி உயிரிழப்பு

by admin

இத்தாலியில் மலைப்பகுதி ஒன்றில்  பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் பனிச் சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.   இத்தாலியின் அல்ப்ஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ள கோர்மேயுயர் மலைப் பகுதியில் இரு மலைகளை இணைக்கும் தொடரின் அருகே; நேற்று சிலர் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த வேளை  அப்பகுதியில் திடீரென பலத்த வேகத்துடன் திடீரென காற்று வீசியதனால்  ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கியே இவர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மேலும்  மூன்று பேர் காயமடைந்துள்ளனர் எனவும்   உயிரிழந்தவர்களில் ஒருவர்  மூவரில் ஒருவர் இத்தாலியர் எனவும் ஏனைய இருவரும் பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More