193
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் கைவிடப்படாது என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். விமல் வீரவன்ச போன்ற தேசியத் தலைவர்களை சிறையில் அடைத்து துன்புறுத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிப் பலம் நாளுக்கு நாள் கைநழுவிப் போகின்றது எனவும் நாட்டுக்காக அநீதிக்காக குரல் கொடுக்கும் தலைவர்கள் இவ்வாறு சிறையில் அடைக்கப்படுவதாகவும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கத்தின் இயலாமை கூட்டு எதிர்க்கட்சியை அடக்குமுறைக்கு உட்படுத்தி ஒடுக்கிவிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love