161
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை மூன்றடுக்கு பாதுகாப்பு முற்றுகைக்குள் யாழ்.காவல் நிலைய காவல்துறையினர் சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் சிறைபிடித்து வைத்து இருந்தனர். யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்குமுகமாக இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையே காவல்துறையினர் முற்றுகையிட்டு இருந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சுற்றி பெண் காவல்துறை உத்தியோகஸ்தர்கள் தமது கைகளை கோர்த்து ஒரு வட்டத்திற்கு சிறைப்பிடித்து வைத்திருந்தனர். அந்த வட்டத்தை சுற்றி வெளி புறமாக ஆண் காவல் துறை உத்தியோகஸ்தர்கள் கையில் தடியுடன் (பெட்டன் பொல்) வட்டமாக நின்றனர். அதற்கு வெளிப்புறமாக இடுப்புபட்டியில் கைத்துப்பாக்கியுடன் ஆண் காவல்துறை அதிகாரிகள் நின்றனர். இவ்வாறாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை காவல்துறையினர் 20 நிமிடங்களுக்கு மேலாக முற்றுகையிட்டு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.
Spread the love