Home இலங்கைகிளிநொச்சி ஆணைவிழுந்தான் பிரதேசத்தில் பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்பவம் பதிவாகியுள்ளது

கிளிநொச்சி ஆணைவிழுந்தான் பிரதேசத்தில் பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்பவம் பதிவாகியுள்ளது

by admin

கிளிநொச்சி ஆணைவிழுந்தான் பிரதேசத்தில் பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த 5 நாட்களிற்கு முன்னர் 22 வயதுடைய யுவதி ஒருவர் வீட்டில் பிரசவித்த குழந்தையை வீட்டின் பின்னால் உள்ள மலசல கூடத்திற்கு அருகில் குழிதோண்டி புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்துடன் தொடர்புபட்ட யுவதி மகப்பேற்றின் பின்னர் ஏற்பட்ட கடும் இரத்த போக்கின் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சம்பவம் தொடர்பில் வைத்தியர்களின் விசாரணைகளின் பின்னர் தெரிய வந்துள்ளது.  பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநாச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புபட்ட பெண் கொழும்பில் ஆடைதொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளதாகவும், குறை மாத்தில் பிறந்த குழந்தை இறந்து பிறந்த நிலையில் பிள்ளையை இவ்வாறு குழி தோண்டி புதைத்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் விசாரணைகளை துரிதப்படுத்த உள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More