உண்ணாவிரதம், மற்றும் போராட்டங்கள் என்பன மிகவும் தேவைப்படும் சந்தர்ப்பங்களிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். இன்றேல் அவை வலுவிழந்து விடும். தற்போதைய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்காக இன்று வடக்கிலும் தெற்கிலும் சில சக்திகள் ஒரே மாதிரியாக செயற்படுகின்றது. என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
‘ஜனாதிபதியிடம் தெரிவிக்க’ செயற்திட்டத்தின் முதலாவது பிராந்திய அலுவலகம் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (04) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறந்து வைக்கப்பட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இப் புதிய செயற்திட்டத்தின் கீழ் வடக்கு மக்களின் பிரச்சினைகளை தம்மிடம் முன்வைப்பது இலகுவாக்கப்பட்டுள்ளது. சகல மக்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து சகலரும் ஒன்றிணைந்தே நாடு என்ற வகையில் முன்னோக்கி செல்ல வேண்டும்.
எதிர்வரும் காலத்தில் ஒவ்வொரு மாதமும் உரிய பராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் வட மாகாணத்திற்கு வருகை தந்து அப்பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து மாகாணத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய வழிவகைகள் குறித்து கண்டறியவுள்ளளேன்.
எதிர்ப்பு உபவாசம், மற்றும் போராட்டங்கள் என்பன மிகவும் தேவைப்படும் சந்தர்ப்பங்களிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். இன்றேல் அவை வலுவிழந்து விடும். தற்போதைய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்காக இன்று வடக்கிலும் தெற்கிலும் சில சக்திகள் ஒரே மாதிரியாக செயற்படுகின்றது.
யுத்தம் நிறைவடைந்து 08 வருடங்கள் கடந்துள்ளபோதிலும் மக்களின் மனங்கள் ஒன்றுபடவில்லை தற்போதைய அரசின் அனைத்து முயற்சிகளும் அனைத்து மக்களினதும் மனங்களை ஒன்றிணைத்து மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாதவண்ணம் சகல மக்களுக்கும் இடையில் சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்புவதற்கேயாகும். என தெரிவித்தார்.