இந்தியா

தேர்தல் விதிகளை மீறியதாக பிரதமர் மோடி தேர்தல் ஆணையகத்தில் முறைப்பாடு

தேர்தல் விதிகளை மீறியதாக இந்திய  பிரதமர் நரேந்திர மோடி மீது மனித உரிமைகள் பிரிவு பொறுப்பாளர் கே.சி.மிட்டல் தேர்தல்  ஆணையகத்தில் முறையிட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அவரது  தொகுதியான வாரணாசியில் நரேந்திர மோடி நேற்று சுற்றுப்பயணம் செய்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போது  அங்கு 6-வது கட்ட தேர்தல்  நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த நிலையில்  மோடி  தேர்தல் அதிகாரிகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் என  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரதமரின் இந்த சுற்றுப்பயணம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் எனவும்  எனவே இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் உள்பட  சிரேஸ்ட பா.ஜ.க தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply