இந்தியா

காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் காவல்துறை உத்தியோகத்தர் பலி – 6 பேர் காயம்

காஷ்மீரில் தீவிரவாதிகள்  மேற்கொண்ட தாக்குதல் ஒன்றில் தாக்குதலுக்கு  காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததுடன்  ராணுவ அதிகாரி உள்பட 6 பேர் காயம் அடைந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காஷ்மீர் மாநிலம் புலவர்மா மாவட்டத்தில்  ஹிஸ்புல் முஜாதீன் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு  கிடைத்த தகவலை அடுத்து குறித்த பகுதி பாதுகாப்பு படை  மற்றும் காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரு தரப்புகளுக்குமடையில் இடம்பெற்ற மோதலில்  காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததுடன்  ராணுவ அதிகாரி உள்பட 6 பேர் காயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதி ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply