229
ஆண்களுக்கு இணையாக பெண்களும் போராடி பெற்ற தினம்தான் மார்ச் 8 ஆம் திகதியாகும். சீனா போன்ற நாடுகள் மார்ச் 8 திகதியை விடுமுறை தினமாக எற்படுத்தியுள்ளனர்.
இலங்கையில் பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்ற 3 பிரதான துறைகளான சுதந்திர வர்த்த வலயம்¸ புலம் பெயர் பணிப்பெண்கள்¸ பெருந்தோட்ட துறையை சார்ந்த பெண்களே 50 வீதத்திற்கும் மேலான வருமானத்தை ஈட்டிதருகின்றனர். அதேநேரம் வாக்காளர்களிள் 56 வீதமானோர் பெண்களாவர். இருப்பினும் இவர்கள் சிவில் அரசியல் உரிமைகள்¸ அதேபோல் பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக மறைக்கப்பட்டவர்களாக இன்றும் வாழ்ந்து வருகின்றனர். (இலங்கை 93 வீதம் கல்வி அறிவை கொண்ட நாடு)
சம உரிமை என்பது எப்போது ஏற்படும் என்றால் பெண்கள் தீர்மானம் எடுக்கும் இடத்தில் எப்போது சமமாக இருக்கின்றார்களோ அன்று தான் சம உரிமை ஏற்படும். தற்போது இலங்கை அரசாங்கம் பிரதேச சபைகளில் 25மூ கோட்டா மூலம் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்குகான அவகாசத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் பெண்களாக இருக்கும் காரணத்தினாலேயே எண்ணவோ சித்திரவதை¸ பட்டினி¸ பலத்காரம்¸ உளரீதியான பாதிப்பு¸ அங்கவீனம்¸ கொலை ஆகிய வன்முறைகளுக்கு பெண்கள் ஆளாகின்றனர். பெண்களுக்கு எதிரான சகலவிதமான பாராபட்சங்களையும் ஒழிப்பதற்கான சமவாயம் (ஊநுனுயுறு) நிறைவேற்றப்பட்டு பல வருடங்களாகிய போதும் பெண்களுக்கு எதிரான வன்முறையானது தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்;ணமே இருக்கின்றது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அவர்களின் உடல்நலக் கோளறுகளுக்கும்¸ பெண்களின் மரணங்;களுக்கான முக்கிய காரணிகளில் ஒன்று என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்தோடு பெண்களுக்கு எதிரான வன்முறையானது பாலியல் மற்றும் இனப்பெருக்க நலனுடன் நெருங்கிப் பின்னிப் பிணைந்துள்ளது. இந்த தொடர்பை பயன்படுத்திதான் ஆணாதிக்க அதிகார சக்திகள் பெண்களின் உடல் மேல் உரிமைக் கொண்டாடி¸ அவர்கள் மீது வன்முறையை ஏற்படுத்தி வருகின்றன.
இதனைத்தொடர்ந்து பெண்கள் வளர்ந்த பின் இறக்கும் வரைக்கும் வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர். அதாவது பெண்களுக்கு தமது இனப்பெருக்கத்தில் எத்தகைய உரிமையும் இல்லாமை¸ வறுமையும் மோசமான சுகாதார நிலமைகளும் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம்¸ சீதனக் கொடுமை¸ பலத்காரம் என்று வன்முறைகள் ஆயுட்காலம் முழுவதும் தொடர்கின்றன. இத்தகைய வன்முறைகளானது வர்க்கம்¸ இனம். தேசம் ஆகிய வேறுபாடின்றி இடம்பெற்று வருகின்றன எனலாம்.
பெண்களுக்கு எதிரான வன்முறையானது சர்வதேச ரீதியில் ஒவ்வொரு செக்கனுக்கும் ஏதோ ஒரு வகையில் இடம்பெற்று வருவதனை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச ரீதியில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒப்பீடும் போது மூன்றாம் உலக நாடுகளிலேயே ஏனைய முதலாம் மற்றும் இரண்டாம் உலக நாடுகளைவிட அதிகரித்துக் காணப்படுகின்றது எனலாம். ஏனெனின்¸ மூன்றாம் உலக நாடுகளில் பெண்களின் கல்வி அறிவு குறைந்த மட்டத்தில் உள்ளமை¸ ஆண்களில் தங்கியிருக்கும் நிலமை¸ கலாச்சாரம் என்ற அடிப்படையில் ஓரங்கட்டப்பட்ட நிலமை போன்ற காரணிகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து செல்ல காரணமாக உள்ளது.
அந்த வகையில் மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான இலங்கையில் மேற்குறிப்பிட்டக் காரணிகளினாலேயே அதிகமானப் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த பெண்களுக்கு எதிரான வன்முறையானது இலங்கையில் வாழும் ஏனைய சமூகப் பெண்களைவிட அதிகமாக உள்ளது. காரணம் பெருந்தோட்டத்துறை பெண்களின் கல்வி நிலை குறைந்த மட்டத்தில் காணப்பட்டுள்ளமை இவர்கள் இலகுவில் வன்முறைக்கு உட்படுவதற்கு சாதகமானதாக அமைகின்றது. அதாவது இவர்கள் மத்தியில் வன்முறைத்தொடர்பான தெளிவின்மை இக்குறைந்தமட்டத்திலான கல்வியினாலேயே ஏற்படுகின்றது. இதனால் பெருந்தோட்டத்துறை பெண்கள் தாம் வன்முறைக்கு உட்படுகின்றோம் என்பதனை அறியாமலே வன்முறைக்கு உட்பட்டு வருகின்றனர். எனவே இவர்கள் மத்தியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டியது அத்தியாவசியமான ஒன்றாகக் காணப்படுவதுடன்¸ பெருந்தோட்டத்துறையில் எதிர்காலத்தில் உருவாக இருக்கும் பெண் சமுதாயத்திற்கு அடிப்படைக் கல்வியை வழங்குவது மற்றுமொரு அத்தியாவசியத் தேவைப்பாடாக உள்ளது.
பெருந்தோட்டத்துறை பெண்கள்¸ ஆண்களில் தங்கியிருப்பது என்பது பெருந்தோட்ட சமூக ரீதியாக கட்டியெழுப்பப்பட்டுள்ள ஒரு அம்சமாகும். இதுவே பெருந்தோட்டத்துறை பெண்கள் வன்முறைக்கு ஆளாகும் இக்கட்டான நிலையில் உள்ளதைப்புரிந்துக்கொள்ள போதுமானதாகும். இவர்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியிலேயே தங்கியுள்ளனர். குறிப்பாக பெருந்தோட்டத்துறை பெண்களினது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை¸ அத்தோடு அதிக நேரம் குறைந்த ஊதியத்திற்கு வேலைச் செய்யவேண்டி ஏற்படுகிறது¸ அதிலும் குறைந்த வசதிகளிடையே ஆண்களைவிட பாதுகாப்புக் குறைந்த சூழ்நிலையிலும் வேலைச் செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு இவர்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதுடன்¸ இவர்களின் உழைப்பு தொடர்ந்து சுரண்டப்பட்டு வருகின்றமையை நாம் அவதானிக்க முடியும்.
பெருந்தோட்டத்துறை பெண்கள் கலாச்சார ரீதியாகவும் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றமை மற்றுமொரு முக்கிய விடயமாகக் காணப்படுகின்றது. பெருந்தோட்டத்துறை பெண்களின் ஆற்றல்¸ அவர்களின் மதிப்பு ஆண்களையும் அவர்களது வாழ்க்கையையும் சார்ந்தே உள்ளதாக நம்புவதற்கு அவர்கள் கலாச்சார ரீதியாக பழக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்கு பெண்களே முதலில் முன்வரவேண்டிய நிலமையானது பெருந்தோட்த்துறைச் சமூகத்தில் மாத்திரமல்லாமல் இலங்கையின் ஏனைய சமூகங்களிலும் ஏற்படுத்த வேண்டியது தற்கால தேவைப்பாடாக உள்ளது.
மேற்படி வன்முறைகள் ஏற்படாத வண்ணம் உறுதிப்படுத்தும் போது பெண்களின் கல்வி¸ பொருளாதார சார்ந்த அபிவிருத்திகள் ஏற்படும். அவ்வாறான நிலைமைகள் தோற்றும் போது மலையக பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படும். அதேசமயம் மலையக தோட்டத்தொழிலாள சமூகத்திலேயிருந்து பெண் தலைமைத்துவம் உருவாக்கப்படுவது அரசியல் கட்சிகள்¸ அரசியல் தலைமைகளின் பாரிய பொறுப்பாகும்.
Spread the love