இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூவிடம் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர். நான்காவது தடவையாக இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்வாறு நெட்டன்யாகூவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வர்த்தகர் ஒருவிடமிருந்து பரிசு பெற்றுக் கொண்டதாகவும், ஊடகங்களை தமக்கு பக்கசார்பான முறையில் இயக்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நெட்டன்யாகூவிற்கு எதிரான விசாரணைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு முதல் நெட்டன்யாகூ பதவியில் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.