147
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவரை படுகொலை செய்தததாக நேபாள பிரஜைகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வட அடிலெய்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர் பற்றியும் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் பற்றியும் விபரங்களும் வெளியிடப்படவில்லை.
39 வயதான இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஆள் அடையாளம் உறுதி செய்யப்படாத காரணத்தினால், இன்னமும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தகவல் அனுப்பி வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love