ஒக்ரோபர் மாதம் முதல் கிரிக்கட் விளையாட்டிலும் சிகப்பு அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது. பாரியளவில் ஒழுக்கயீனமாக நடந்து கொள்ளும் வீரர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றும் அதிகாரம் நடுவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த புதிய விதி அமுலுக்கு வர உள்ளது. அணியின் வீரர் ஒருவர் பாரியளவில் மைதானத்தில் குற்றமிழைத்தால் ஐந்து பெனல்டி ஓட்டங்கள் எதிரணிக்கு வழங்கப்படுவதுடன், வீரர் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட உள்ளார்.
களத்தடுப்பில் ஈடுபட்டாலும் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டாலும் இவ்வாறு வெளியேற்றப்பட உள்ளனர். இந்த புதிய விதி நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நான்காம் கட்ட விதி மீறலின் போதே வீரர் முழுமையாக போட்டியில் தொடர்ந்தும் பங்கேற்க முடியாத வகையில் வெளியேற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.