இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இலங்கையின் சக்திவள துறைகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர், மெல்கம் டர்ன்புல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.
பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியாக இலங்கையுடன் வலுவான உறவை பேண தமது நாடு தயாராகவிருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர் அவுஸ்திரேலியாவிற்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இலங்கை ஜனாதிபதிக்கு, அவுஸ்திரேலிய பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பிலான விபரங்களை ஜனாதிபதி ஊடக பிரிவு ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது.