பலவந்த காணாமல் போதல்கள் தொடர்பிலான சட்டம் திருத்தி அமைக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பலவந்த கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பிலான சர்வதேச பிரகடனங்களுக்கு அமைவாக சட்டத் திருத்தம் செய்யப்பட உள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் திகதி இந்த பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டிருந்தது. புதிய சட்டத் திருத்தம் குறித்த உத்தேச பிரேரணை அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்லவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பலவந்த காணாமல் போதல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் 20 வருடங்களுக்கு அதிகரிக்காத சிறைத்தண்டனையும், உச்ச பட்சமாக பத்து லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்படும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.