216
மடகஸ்கர் தீவில் ஏற்பட்ட புயல் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 7 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு முதல் கடும் வறட்சியும் அதைத் தொடர்ந்து உணவு தட்டுப்பாடும் நிலவுகின்ற நிலையில் நேற்றையதினம் அங்கு எனாவோ என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கியது.
இப்புயல் மடகாஸ்கரின் வடகிழக்கில் உள்ள அன்டாலாகா பகுதியில் கரையை கடந்த போது மணிக்கு 290 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் மழையும் அதனால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.
இதன்போதே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Spread the love