ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தைத் ஆரம்பித்துள்ளார். மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் போராட்டத்தில், மதுசூதனன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உள்ளிடோர் கலந்துகொண்டுள்ளனர். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளியே வரும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
Spread the love
Add Comment